தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டையில், மழை வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்து, ஊர்வலமாக சென்றனர்.தேன்கனிக்கோட்டை, ஜெய்தெருவில் உள்ள முத்து மாரியம்மன் மன்றம் சார்பில், மழை வேண்டி பெண்கள் பால் குடம் எடுத்தும், முளைப்பாரி எடுத்தும் ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடந்தது. மேல்மருவத்தூர் பாரதி மன்ற தலைவி வாசுகி தலைமையில், பெண் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். மேலும், கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.