சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியான பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. காப்பு கட்டுதல் நிகழ்ச்சிக்கு மட்டுமே இந்த கோயில் நடை திறக்கப்படும். அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று காப்பு கட்டப்படும். பக்தர்கள் வழங்கிய பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பூக்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏப்., 23 அன்று கொடியேற்றம் நடக்கிறது. திருக்கல்யாணம் ஏப்., 30 ல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மே முதல் மற்றும் 2 தேதிகளில் நடைபெறும். ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் ரம்யசுபாஷினி செய்துவருகின்றனர்.