பணபலம், உடல்நலம், புத்திசாலித்தனம், அன்பான மனைவி, புத்திரப்பேறு, நல்ல உறவினர் ஆகியவை குறைவின்றி கிடைத்தால் அதை லட்சுமி யோகம் என்பர். இது கிடைக்க, வெள்ளியன்று மாலை விளக்கேற்றி, லட்சுமியின் 12 திருநாமங்களைச் சொல்லி வழிபட வேண்டும்
ஸ்ரீதேவி - செல்வத்திருமகள் மகாலட்சுமி - லட்சணம் நிறைந்தவள் அம்ருதோத்பவா - அமுதத்தோடு பிறந்தவள் கமல ப்ரோக்தா - தாமரையில் வாழ்பவள் சந்திர சோதரா - சந்திரனின் சகோதரி விஷ்ணு பத்னீ - திருமாலின் மனைவி விஷ்ணு வல்லபா - திருமாலின் சக்தி க்ஷீராப்தி ஸுதா - பாற்கடலில் பிறந்தவள் ஸரோஜன்யாசனா - தாமரை ஆசனம் கொண்டவள் தேவ தேவிகா - மகாதேவியாக திகழ்பவள் லோக சுந்தரி - பேரழகு மிக்கவள் ஸர்வாபீஷ்ட பலப்ரதா - விருப்பத்தை நிறைவேற்றுபவள்