பதிவு செய்த நாள்
21
ஏப்
2015
12:04
குறிச்சி : கோவை, சுந்தராபுரம் முத்துமாரியம்மன் கோவில், 34ம் ஆண்டு திருவிழா, இன்று துவங்குகிறது. சுந்தராபுரம் அருகேயுள்ள மாரியம்மன் கோவிலில் விழா, இன்று இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. 28ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நடுதல் நடக்கிறது. மே 1 மாலை, 5:00 மணிக்கு, வாத்திய இசையும், தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு மற்றும் அன்னதானமும் நடக்கின்றன. 2ம் தேதி மாலை மாறுவேட போட்டியும், 3ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, பட்டிமன்றம் நடக்கிறது.வரும் 5ம் தேதி, அம்மன் திருக்கல்யாணமும், அன்னதானமும் நடக்கின்றன. 6ம் தேதி காலை, 8:00 மணிக்கு, குறிச்சி குளக்கரையிலுள்ள பொங்காளியம்மன் கோவிலிலிருந்து, சக்தி கரகம், தீர்த்தகுடம், பால்குடம், பூவோடு ஆகியவற்றுடன் சிம்ம வாகனத்தில் அம்மன் ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது. மதியம், 12:00 மணிக்கு, அம்மனுக்கு அக்னி அபிஷேகம் நடக்கிறது. மாலை, 4:00 மணி முதல் பொங்கல், மாவிளக்கு வழிபாடும், மாலை, 6:30 மணிக்கு வாணவேடிக்கையும் நடக்கின்றன. 7ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 8ம் தேதி காலை, 9:00 மணிக்கு, குரு சங்கீத கலாஷேத்ரம் மற்றும் மாணவர்களின் பக்தி இசையும், 10:00 மணிக்கு மகா அபிஷேக ஆராதனையும் நடக்கின்றன.