மனைவி கணவனுக்கு பணிந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் தீவிரமாக வலியுறுத்துகிறது. கணவனுக்குப் பணிந்து நடப்பதில் பெண்கள் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் காண வேண்டும். ஏனெனில், இறைவனே அப்படித்தான் விரும்புகிறான். இறைவனின் கட்டளையை நிறைவேற்றும் பெண்ணாக, இறைவனை மகிழ வைக்கின்ற பெண்ணாக மனைவி இருக்க வேண்டும். குர்ஆனில், அல்லாஹ் ......எனவே ஒழுக்கமான பெண்கள் கீழ்ப்படிந்தே இருப்பார்கள், என்கிறான்.நபிகள் நாயகம், கணவனின் அனுமதியின்றி மனைவி நோன்பு நோற்கக்கூடாது, என்கிறார்.நோன்பு என்பது இஸ்லாமின் உயிர்மூச்சு. அத்தகைய நோன்பையே, கணவனின் அனுமதி பெற்ற பிறகே மனைவி நோற்கவேண்டும் எனச் சொல்வதில் இருந்தே, பெண்கள் கணவருக்கு பணிந்து நடக்க வேண்டியதின் அவசியம் துல்லியமாக வலியுறுத்தப்படுகிறது.எவ்வகையான பெண்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது குறித்தும் நாயகம் சொல்லியுள்ளார்.ஒரு பெண் ஐவேளை தொழுகையும் முறையாகப் பேணி வருகிறாள். தனது மானத்தைப் பாதுகாக்கிறாள். தம் கணவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பவளாகத் திகழ்கின்றாள் எனில், அவள் சுவனத்தின் (சொர்க்கம்) எந்த வாயில் வழியாகவும் நுழைந்து விடலாம், என்கிறார். இந்த அருளுரையின்படி, கணவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள் சொர்க்கத்தை அடைவது உறுதியாகிறது.