தூத்துக்குடி-மதுரை நான்குவழிச் சாலை, குறுக்குச்சாலையின் சந்திரகிரி கிராமத்தில் உள்ளது. சந்தன மாரியம்மன் கோயில். இக்கோயில் பொங்கல் திருவிழாவின் போது அக்னி சட்டி எடுத்து ஊர் சுற்றி வரப்படுகிறது. பொதுவாக மண்ணிலான சட்டியில் தான் அக்னிபூ எடுத்து பக்தர்கள் ஊர் சுற்றி வருவார்கள். ஆனால், இக்கோயில் பூசாரி வெண்கல சட்டியில் அக்னி பூ எடுத்த ஊர் சுற்றி வருவது புதுமையாகும்.