பதிவு செய்த நாள்
22
ஏப்
2015
12:04
பரமக்குடி : பரமக்குடியில் சித்திரைத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
பரமக்குடியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழாவையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது, இரவு 7 மணிக்கு பிரியாவிடையுடன் சுவாமி, மீனாட்சி அம்மன் சிம்மாசத்தில் வீதியுலா வந்தனர்.
தொடர்ந்து கற்பகத்தரு, கிளி, பூத, சிங்க, குதிரை, கைலாச, காமதேனு, ரிஷப, நந்திகேஸ்வரர், அன்ன, இந்திர, யானை வாகனங்களில் வீதியுலா வரவுள்ளனர். ஏப்., 29ல் இரவு திருக்கல்யாண மண்டபத்தில் சீர் வரிசை நிகழ்ச்சியும், மறுநாள் மாலை 6 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், யானை, பூப்பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். மே 1 ல் காலை 9.30 மணிக்குதேரோட்டமும், மறு நாள் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.