விழுப்புரம்: விழுப்புரம் மகாலட்சுமி குபேரர் கோவிலில், அட்சய திருதியை ஹோமம் நடந்தது.
விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு, திருநகரிலுள்ள மகாலட்சுமி குபேரர் கோவிலில், அட்சய திருதியை ஹோமம் நேற்று நடந்தது.
காலை 6.00 மணிக்கு கோபூஜை, விஸ்வரூபம், 6.30 மணிக்கு புண்ணியாவாஹனம், குபேர மூல மந்திரம், 7.30 மணிக்கு மகாபூர்ணாஹூதி, 8.30 மணிக்கு மகா திருமஞ்சனம், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது.
காலை 10.00 மணிக்கு, விசேஷ அலங்கார தீபாராதனை, பகல் 12.00 மணிக்கு பிரசாத வினியோகம் மற்றும் நெல்லிக்கனி வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.