பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
12:04
கோவை : சேரன் மாநகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. சேரன் மாநகரிலுள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு சித்திரை திருவிழா ஏப்., 20ல் துவங்கி மே, 1 வரை நடக்கிறது. நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. தினமும் காலை, 7:00 முதல், 8:00 மணி வரை ஹோமம், மாலை, 6:30 மணிக்கு திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏப்., 28 காலை, 10:30 மணிக்கு மேல், 11:00 மணிக்குள் தடாதகை பிராட்டியார் அன்னை மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. ஏப்., 30 காலை, 10:45 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:30 மணிக்கு திருவீதி உலா நடக்கிறது. மே, 1 காலை கொடி இறக்குதல், காலை, 9:00 மணிக்கு தீர்த்தவாரி, மாலை, 4:30 மணிக்கு பிரதோஷம், மாலை, 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு, 8:00 மணிக்கு பள்ளியறை பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.