கூத்தாண்டவர் கோவில் திருவிழா: அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2015 12:04
உளுந்தூர்பேட்டை: கூத்தாண்டவர் கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தாசில்தார் ராஜராஜன் தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., சங்கர் முன்னிலை வகித்தார். இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயபாலன், துணை பி.டி.ஓ., ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் பெருமாள், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்தானகுமார், ஊராட்சி தலைவர் வெள்ளிகண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர். திருவிழாவில், விழுப்புரம் மாவட் டம் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களில் இருந்தும், இதர மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வது வழக்கம். இதனால் இத்திருவிழாவை எந்தவித அசம்பாவிதங்களுமின்றி, சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப் பட்டது. தற்காலிக பஸ் நிறுத்தம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.