திருவள்ளூர் : லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், ஆனி பிரமோற்சவ விழாவின் ஏழாம் நாளான நேற்று காலையில் தேர்த் திருவிழா கோலாகலமாக நடந்தது. பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ளது, லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். இக்கோவில் ஆனி பிரமோற்சவ விழா 24ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாளன்று காலை 6 மணிக்கு கருடசேவை நிகழ்ச்சியும், கோபுர தரிசனமும் நடந்தது. தொடர்ந்து 7ம் நாளான நேற்று காலை 7.30 மணிக்கு தேர்த் திருவிழா நடந்தது. உற்சவர் பெருமாள், வண்ண மலர்களால் தேரில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை 9ம் நாள், பல்லக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, லட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் தலைமையில் விழாக் குழுவினர் செய்துள்ளனர்.