ஆர்.ஏ.புரம்: சத்யசாய் சேவா அறக்கட்டளை சார்பில், சத்யசாய் ஆராதன மஹோத்சவம் கொண்டாடப்பட்டது. ஆர்.ஏ.புரம், சுந்தரத்தில் நேற்று நடந்த விழாவில், காலையில் பகவானுக்கு, ஏகாதச ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 90க்கும் மேற்பட்ட முன்னணி இசைக் கலைஞர்கள், பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடினர். மாலையில், சத்யசாய் குறித்த, காணொலி நிகழ்ச்சி நடந்தது. சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மகா வித்யாலயாவின் ஆராய்ச்சி துறை இயக்குனர், டாக்டர் வேணுகோபால் சிறப்புரையாற்றினார். பின், வேத பாராயணம் மற்றும் சுந்தரம் குழுவினரின் பஜனை நடைபெற்றது.