மார்கழி மாதத்தில் சிவாலயங்களில் அதிகாலையில் ஒலிக்கும் திருவெம்பாவை என்னும் இனிய நூல் பிறந்த தலம் திருவண்ணாமலை. இங்குள்ள அடி அண்ணாமலை (அண்ணாமலையின் அடிவாரப்பகுதி) உள்ள சிவாலயத்தில் இருந்தபடி தான் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை இயற்றினார் என்பர். சிவன் மீது பாசமும், பக்தியும் கொண்ட கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் வேண்டி இதனைப்பாடுவர். தங்களுக்கு கிடைக்கும் கணவர், சிறந்த சிவபக்தனாக இருக்க வேண்டும் என பாடுவது போல் இந்நூல் அமைந்திருக்கும்.