லட்சுமி நாராயணர் கோவில் புதுப்பிப்பு பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2015 02:04
ஆர்.கே.பேட்டை: அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில் ராஜகோபுரம், விமான கோபுரம் புதுப்பிக்கும் பணிக்காக, பாலாலயம் அமைக்கப்பட்டுள்ளது. நித்திய பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார் அஷ்டலட்சுமி உடனுறை நாராயண பெருமாள் கோவில், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவில் ஆக விளங்குகிறது. அஷ்டலட்சுமிகளுக்கும் தனித்தனியே சன்னிதி அமைந்திரு ப்பது சிறப்பு அம்சம். வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம் உள்ளிட்டவை சிறப்பாக நடந்து வருகின்றன. கோவில் ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களை புதுப்பிக்கும் பணி துவங்க உள்ளது. இதற்காக, பாலாலயம் அமைக்கப்பட்டது. கோபுரம் சீரமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வந்தா லும், தினசரி பூஜைகளில் எந்த மாற்றமும் இருக்காது. கோவில் உட்பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலாலயம் மற்றும் மூலவர் சன்னிதிகளில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலாலயம் அமைக்கும் பூஜையில், வங்கனுார் மற்றும் சி ங்கசமுத்திரம் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.