புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் ரேணுகாம்பிகை கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வரும் 3ம் தேதி காவடி உற்சவம் நடக்கிறது. புதுச்சத்திரம் ரேணுகாம்பிகை கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி அன்று காவடி உற்சவம் நடைபெறும். இந்தாண்டு காவடி உற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. சிறப்பு விழாவான காவடி உற்சவம் வரும் 3ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், காலை 10:00 மணிக்கு காவடி உற்சவம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. இரவு பாலமுருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும், 4ம் தேதி இடும்பன் பூஜையும் நடக்கிறது.