பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
02:04
திருவள்ளூர்: அம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில் நேற்று, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, குண்ணவலம் கிராமத்தில், தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த, 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், மதியம், 2:00 மணி முதல், மாலை, 6;00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. நேற்று முன்தினம் பகாசூரன் வதம் நிகழ்ச்சியும், நேற்று நண்பகல், 11:00 மணிக்கு அர்ஜுனன், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இன்று காலை, 10:00 மணிக்கு, சுபத்திரை கல்யாணம் நிகழ்ச்சியும், 30ம் தேதி தர்மராஜா வீதியுலா, மே 1ம் தேதி மாடுபிடி சண்டை, மே 2ம் தேதி துரியோதனன் படுகளம், மே 3ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு தீமிதி திருவிழா மற்றும் அம்மன் வீதியுலாவும், மே 4ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா நிறைவு பெறுகிறது.