பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
05:04
பகவான் கிருஷ்ணர் பேசிய ப்ராகிருத மொழியான ஸௌரஸேனி யிலிருந்து இளைத்த மொழி இன்று தக்ஷிண பாரதத்தில் பேசப்பட்டு வரும் ஸெராஷ்ட்ர மொழியாகும். வடமதுரையில் கண்ணன் அவதரித்தான். தென் மதுரையில் அவதரித்து கண்ணனின் நாயகியாய் தம்மை வரித்துக் கொண்டவர் கிருஷ்ண பக்த கவி ஸ்ரீமந் நடன கோபால நாயகி ஸ்வாமிகள். மதுரை மாநகரில் அவதரித்த ஸௌராஷ்ட்ர ஆழ்வாரின் வரலாறு. 1980 ஸப்தகிரியில் - ஸௌராஷ்ட்ர ஆழ்வார் என்ற தலைப்பில் இவரது சரித்திரம் பிரசுரமானது. சீரிய மொழியான ஸௌராஷ்ட்ர மொழியில் நாயகி ஸ்வாமிகள், பகவத் ராமானுஜர் குறித்தும், குருபக்தி மஹிமை குறித்தும் பாடியுள்ள கண்ணி வகைச் செய்யுள்களையும், அதன் அந்த விசேஷங்களையும் இங்கு சிறிது பார்ப்போம்.
ராமானுஜ பாஷ்யம் ஸெய்லுவோ
ராமானுஜ குரு தியான் கரி ஜிவ்லுவோ
ராமா கிருஷ்ணா மெனி நசொபா
ராமானுஜா மெனி ராத்தீ ஸரம் வசொபா
ராமானுஜா மேனி ஸ்ரீமதே ராமானுஜாரி: யெ
காமக் ரோதாதி குண்ணுனு கடை ஜாய்
ஆழ்வார் ஸ்தோத்ரு காரி நம்மாழ்வார் ஸ்தோத்ரு
பாப் மூள்ஸெர ஜாய் பரமபதமுக் வாட்ஹோய்
மணவாளமுனி குருஷக் தாஸ் ஹொயெதீஸ்
மாயாதோணும் மத்தி ஹன்வாயி
விசிஷ்டாத்வைதம் விவேக் தேயி
விசிஷ்டாத்வைதம் ஸொடெத் விவேக் ஜாயி.
பகவத் ராமானுஜரின் அருளிச் செயல்களான கீதா பாஷ்யம். ப்ரம்ம ஸுத்ர பாஷ்யம் முதலான உரை நூல்களைப் படித்தளியுங்கள். ராமா! கிருஷ்ணா! என்று கூறி ஆடிப்பாடுங்கள். ராமானுஜ குருவே சரணம் என்று இரவும், பகலும் உச்சரியுங்கள். ஸ்ரீமதே ராமானுஜாய நம; என்று கூறுங்கள். காமம், குரோதம் முதலான தீய குணங்கள் நம்மை விட்டு அகலும். ஆழ்வார் ஸ்தோத்ரம், நம்மாழ்வார் ஸ்துதிசெய்வீர்! பாவங்கள் வேருடன் நீங்கும். பரமபதம் வைகுண்டம் செல்லலாம். மணவாள மாமுனிகளின் தாஸன் ஆவீர். மாயை எனும் தோற்றத்திற்கு மண் தூவி விரட்டலாம். ராமானுஜர் வழிநெறியான விசிஷ்டாத்வைத தத்துவத்தினைப் பின்பற்றுக. விவேக புத்தியினைப் பெற்று உயர்வடையலாம். ஸ்ரீநாயகி சுவாமிகள் உபதேசத்தினைப் பின்பற்றி நாம் உயர்வு பெறுவோம், மகிழ்வோம்.