பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
குன்னுார் : பெரிய பிக்கட்டியில் வரும் மே மாதம் 2, 3 தேதிகளில் நவசண்டி மகாயாகம் நடக்கிறது.குன்னுார் கேத்தி அருகேயுள்ள பெரிய பிக்கட்டி கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் வரும் 2, 3ம் தேதிகளில் நவசண்டி மகா யாகம் நடக்கிறது.இதில், 2ம் தேதி காலை 10:30 மணிக்கு விநாயகர் பூஜை, மகாசங்கல்பம், புன்யாகவாசனம், கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், பூர்ணாகுதி, வாஸ்து சாந்தி உட்பட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.3ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை மங்கள இசை, கலச பூஜை, கோ பூஜை, நவசண்டிஹோமம், சவுபாக்கிய திவ்ய சமர்ப்பணம், மகா தீபாராதனை ஆகியவை நடக்கின்றன. இதில், நடக்கவுள்ள, 13 ஹோமங்களில், காளி, மகாலட்சுமி, சங்கரி தேவி, ஜெயதுர்கை, மகாசரஸ்வதி, பத்மாவதி, ராஜமாதங்கி, பவானி, அர்த்தாம்பிகா, காமேஸ்வரி, புவனேஸ்வரி, சூலினிதுர்கா, சிவதாரிகா புவனேஸ்வரி ஆகியோருக்கு பட்டுக்கள் சார்த்தி யாக்கனிகள், மூலிகை, மலர்களால் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. காரமடை நஞ்சுண்டேஸ்வர சுவாமி கோவில், ஞானசுவாமி நாத பண்டித குருசாமி சர்வ சாதகங்களை நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை பெரிய பிக்கட்டி ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.