பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
சென்னை: பார்த்தசாரதி கோவிலில், கருங்கற்கள் பதிக்கப்படுவதாக, தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலைய துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பார்த்தசாரதி கோவிலில், பழமை மாறாமல் திருப்பணி நடக்க, இன்ஜினியர்கள் குழு, தொல்லியல் துறை குழு, அறநிலைய துறை குழு என, மூன்று குழுக்கள், செயல்பட்டு வருகின்றன. கோவில் மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில், துவார பாலகர் அமைந்துள்ள மண்டபத்தின் தரைப்பகுதியில் இருந்த மார்பிள் கற்கள் அகற்றப்பட்டு, கருங்கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.