புதுச்சேரி: மடுகரை குரு நகரில் உள்ள லட்சுமி நாராயணன் பெருமாள் கோவிலில், முதலாம் ஆண்டு ராமானுஜர் திருவாதிரை நட்சத்திர வைபவம் நடந்தது. நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபஞ்ச சேவையும், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர். ராமானுஜர் வைபவம் குறித்த உபன்யாசம் நடந்தது.