காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை பிரமோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று காலை பூத வாகனத்தில் கச்சபேஸ்வரர் எழுந்தருளினார். நேற்று காலை 7:00 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு, பூத வாகனத்தில் எழுந்தருளி, ராஜவீதி வழியாக காமராஜர் சாலை, மேட்டு தெரு, தாயார் குளம் தெரு, பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெரு, புத்தேரி தெரு போன்ற பகுதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11:00 மணிக்கு மீண்டும் கோவிலை சென்றடைந்தார். நேற்று இரவு, திருக்கயிலாய காட்சியாக இராவணன் வாகனத்தில் கச்சபேஸ்வரர் எழுந்தருளி பவனி வந்தார். முன்னதாக நேற்று முன்தினம் இரவு, சந்திர பிரபை வாகனத்தில் கச்சபேஸ்வரர் எழுந்தருளி ராஜவீதிகளில் வலம் வந்தார்.