சக்தி பீடங்கள் 51ல் வடக்கே காஷ்மீர் வைஷ்ணவி கோயில் மகாமாயா தலம். இதற்கடுத்து கிழக்கே அசாம் காமாக்யா, தெற்கே கன்னியாகுமரி பகவதியம்மன், மேற்கே குஜராத் அம்பாஜி ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த நான்கு கோயில்களும் இந்தியாவின் நான்கு திசைகளில் அமைந்து சக்திபீடங்களுக்கான எல்லையை வரையறுத்துக் காட்டுகின்றன. இந்த நான்கு தலங்களுக்கும் சென்று வழிபட்டால் இந்த எல்லைக்குள் இருக்கும் சக்திகளை வணங்கிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.