மனிதன் சத்துவம், ராஜஸம், தாமஸம் என மூன்று குணங்களை கொண்டுள்ளான். இதில், சத்துவம் என்பது சிறந்த பண்புகளுடன் நற்சிந்தனை, நல்மனதுடன் உள்ள குணத்தையும், ராஜஸம் என்பது இச்சை, காமம், பேராசை, தற்பெருமை ஆகிய தீய குணங்களையும், தாமஸம் என்பது சோம்பலையும் குறிக்கிறது. மனிதன், வாழ்க்கையில் சிறக்க தீய குணங்களை அழிக்க வேண்டும். மீறி அக்குணங்களைக் கொண்டிருந்தால் அதுவே அழிவுக்கு வழிவகுக்கும். மூன்று குணங்களில் சத்துவ குணத்தை கொண்டிருந்தால் மட்டுமே நிலையான இன்பம் பெற முடியும்.