பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
கோபி: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் வகையறா அமரபணீஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நாளை (30ம் தேதி) துவங்குகிறது.கோபியில் இருந்து, அந்தியூர் செல்லும் ரோட்டில், இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பாரியூரில், வயல்களுக்கு நடுவே, தடப்பள்ளி வாய்க்கால் கரையில், கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இதன் வகையறா கோவில்களாக, அமரபணீஸ்வரர், ஆதிநாராய பெருமாள் கோவில்கள் உள்ளன.பாரியூரில் எழுந்தருளியிருக்கும், சவுந்திரநாயகி சமேத அமரபணீஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா நாளை (30ம் தேதி) முதல் மே, 4ம் தேதி வரை நடக்கிறது. நாளை, தேர் வெள்ளோட்டம், 1ம் தேதி வாஸ்து சாந்தி, 2ம் தேதி காலை, 7 மணிக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம், அஷ்டபலி, சுவாமி புறப்பாடு நடக்கிறது.மாலை, 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது. மே, 3ம் தேதி மாலை, 5 மணிக்கு திருத்தேரோட்டம், மே, 4ம் தேதி மகாதரிசனம், மஞ்சள் நீர், நடராஜர் திருவீதி உலா நடக்கிறது. செயல் அலுவலர் பாலக்கிருஷ்ணன், தக்கார் சபர்மதி ஆகியோர், ஏற்பாடுகள் செய்கின்றனர்.