மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்களை கவர்ந்த பறவைக்காவடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2015 12:04
பந்தலுார் : பந்தலுார் அருகே பிதர்காடு மாரியம்மன் கோவில் திருவிழாவில், பறவைக்காவடி ஊர்வலம் பார்வையாளர்களை கவர்ந்தது. பந்தலுார் அருகே பிதர்காடு பஞ்சோரா முத்துமாரியம்மன் கோவில் 7ம் ஆண்டு தேர் திருவிழா, 24ம்தேதி காலை 5:30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவில் கமிட்டித்தலைவர் ரமேஷ் கொடியேற்றினார். பக்தர்களின் இருசக்கர வாகன ஊர்வலம், மதியம் 1:00 மணிக்கு அன்னதானம், மாலை 5:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம், இரவு 7:00 மணிக்கு கலைநிகழ்ச்சி, 8:00 மணிக்கு அம்மன் குடி அழைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. 25ம் தேதி காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜைகளும், 10:00 மணிக்கு அங்க அலகு பறவை காவடி, பால்குட ஊர்வலமும் நடந்தது. 12:00 மணிக்கு அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு திருத்தேர் ஊர்வலமும் நடந்தது. 26ம்தேதி காலை 4:00 மணிக்கு அக்னிகாவடியும், பூகுண்டம் இறங்குதலும் நடந்தன. மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவுபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.