பதிவு செய்த நாள்
29
ஏப்
2015
12:04
கரூர் : கரூர் நகரில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் உற்சவம் மே, 10ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்குகிறது.மே, 10ம் தேதி மாலை, 6 மணி முதல் இரவு, 9.15 மணிக்குள் கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. மே, 17ம் தேதி மாலை, 6.15 மணிக்கு காப்பு கட்டுதலும், மறுநாள், 18ம் தேதி காலை, 7.15 மணிக்கு பல்லக்கு இரவு, 7.15 மணிக்கு புலிவாகன புறப்பாடும் நடக்கிறது.வரும், 19ம் தேதி காலை, 7.15 மணிக்கு பல்லக்கும், இரவு, 7.15 மணிக்கு பூதவாகன புறப்பாடும், 20ம் தேதி இரவு, 7.15 மணிக்கு சிம்மவாகனம், 21ம் தேதி இரவு, 7.15 மணிக்கு அன்னவாகனம், 22ம் தேதி இரவு, 7.15 மணிக்கு சேஷவாகனம் புறப்பாடு நடக்கிறது.மே, 23ம்தேதி இரவு, 7.15 மணிக்கு யானை வாகனம், மறுநாள், 24ம் தேதி மாலை, 6.45 மணிக்கு குதிரை வாகனம், 25ம் தேதி காலை, 7.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.மே, 26ம் தேதி இரவு, 7 மணிக்கு கெஜலட்சுமி வாகன புறப்பாடு நடக்கிறது. மறுநாள், 27ம் தேதி மாலை, 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்பின், புஷ்ப விமானம், கருட வாகனம், மயில்வாகனம், கிளிவாகனம், வேப்பமர வாகனம், பின்ன மர வாகனம், அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், பஞ்சபிரகாரம், புஷ்ப பல்லக்கு, மாரியம்மன் பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம், அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கரூர் மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.