சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஜெனன விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமிக்கு வாசவி பூங்காவில் இருந்து பெண்கள், 108 பால்குடம் ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். மூலவருக்கு 150 லிட்டர் பால் உட்பட 17 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து 108 வலம்புரி சங்குகள் வைத்து, சுவாமிக்குமஞ்சள் காப்பு அலங்காரம் செய்து, வெள்ளி கவசம் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. நிகழ்ச்சியில் ஆர்ய வைஸ்ய சமூக தலைவர் விட்டேல், நிர்வாக தலைவர் கோவிந்தசாமி உட்பட பலர் கலந்துக் கொண்டனர். இரவு சாமி வீதியுலா நடந்தது.