பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
10:04
ஆர்.கே.பேட்டை: விடியங்காடு கிராமத்தில் நேற்று, கங்கையம்மன் கோவில் திருவிழா நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த விடியங்காடு கிராமம், பசுமரத்தோப்பில் உள்ள கங்கையம்மன் கோவிலில், நேற்று, திருவிழா நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், கோவில் வளாகத்தில், திரளான பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் வைத்தனர். மாலை 6:00 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, காலை 9:00 மணிக்கு, அம்மன் சிரசு ஏற்றல் நடந்தது. பக்தர்கள் அலகு குத்துதல், எலுமிச்சை மாலை சாற்றுதல் என, தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி, பிரார்த்தனையை நிறைவேற்றினர். திருவிழாவை ஒட்டி, இரு நாட்களும் கிராமம் முழுவதும் வேப்பிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.