திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வசந்தோற்சவ விழாவில், சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடந்தது. திருக்÷ காவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வசந்தோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7:00 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந் தது. மாலை 6:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஆனந்தவல்லி சமேத ச ந்திரசேகரர் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, வசந்த மண்டபத்தை வந்தடைந்தார். வேதமந்திரங்கள் முழங்க, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. வசந்த மண்டபத்தை 5 முறை வலம்வந்தபின், சுவாமி ஆஸ்தானம் சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.