பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
11:04
வேலூர்: திருவண்ணாமலை கோவிலில், வரும், 3ம் தேதி, அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு, வரும், 3-ம் தேதி காலை, 7:52 மணிக்கு துவங்கி, 4-ம் தேதி காலை, 8:48 மணி வரை நடக்கும்.அன்று, கிரிவலத்துக்கு, 10 லட்சம் பக்தர்கள் வருவர் என, மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்பதால், 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் கூறுகையில், அண்ணாமலையார் கோவிலில், மூலவர் மற்றும் அம்மன் சன்னிதியில், சித்ரா பவுர்ணமி அன்று, அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது. பொது தரிசனம், மற்றும் கட்டண சிறப்பு தரிசனம் வழக்கம்போல் நடக்கும், என, தெரிவித்துள்ளார்.