பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சித்திரை பெருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 12:04
விக்கிரவாண்டி: பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் புறவம்மை கோவிலில் சித்திரை பெருவிழா நடந்தது. வரலாற்று புகழ் மிக்க பனையபுரம் பன ங்காட்டீஸ்வரன் கோவிலில் கடந்த 22ம் தேதி முதல் சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஆறாம் நாள் உற்சவத்தை முன்னிட்டு செங்குந்த மரபினர் சார்பில் திருவிழா நடந்தது. காலை 8:00 மணிக்கு பனங்காட்டீஸ்வரன் உடனுறை புறவம்மைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு சிவன் பார்வதியுடன் தங்கரதத்தில் புஷ்ப அலங்காரத்துடன் சத்தியாம்பிகை சுவாமி வீதியுலா நடந்தது. கண்டாச்சிபுரம் சிவனடியார்களின் ருத்திரதாண்டவ நிகழ்ச்சி நடந்தது. இந்து அறநிலையதுறை செயல்அலுவலர் பாலசுப்ரமணியராஜன், ஆய்வாளர் சரவணன், க ணேசன் குருக்கள் மற்றும் செங்குந்த மரபினர் நாட்டாண்மை தேவநாதன், கிராம முக்கியஸ்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.