சின்னாளப்பட்டி: சின்னாளப்பட்டி ஸ்ரீராமஅழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, இன்று மீனாட்சி திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. முன்னதாக, மாப்பிள்ளை அழைப்பு, காசியாத்திரை, காப்பு கட்டு, பூணூல் அணிதல், ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மீனாட்சிதிருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்ணக்கானோர் கலந்து கொண்டனர். ஏ.டி.எஸ்., வகையறா சார்பில் நடந்த இந்த திருக்கல்யாண விழாவில், ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான நிர்வாகிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. பக்தர்களுக்க திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.