பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
12:04
செஞ்சி: அனந்தபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. செஞ்சி தாலுகா அனந்தபுரத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் செய்துள்ளனர். இக்கோவிலில் நாளை (1ம் தேதி) மகா கும்பாபிஷேகம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு கடந்த 28ம் தேதி காலை 10.30 மணிக்கு அகல்மஷ ஹோமம், யாக சாலை வாஸ்து சாந்தி, யஜமான சங்கல்பம், பகவத் அனுக்கிரஹம் நடந்தது. மாலை யாகசாலை பிரவேசம், ககலச பிரதிஷ்டை, முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு மகா சாந்தி, உத்தஹோமம், சாற்று முறை நடந்தது. மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நாளை அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனம், புண்யாஹம், உக்தஹோமம், ரௌத்திரம், காலை 7: 15 மணிக்கு மஹா பூர்ணாஹதி யாத்ரா தானமும், 8 மணிக்கு கடம் புறப்பாடும், 8:30 மணிக்கு ராஜகோபுரம், விமான கலச மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மூலவர் சேவை, சாற்று முறை திர்த்த பிரசாதமும், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சாமி வீதி உலாவும் நடக்கிறது.