கீழக்கரை பத்திரகாளியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 02:04
கீழக்கரை: கீழக்கரை கிழக்கு நாடார் தெருவில் உள்ள பத்திரகாளி அம்மன், தர்மமுனீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்., 21ல், காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் மாலை உற்சவர்களுக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விளக்கு பூஜை நடந்தது. பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. நேற்று மாலை உற்சவரான பத்திரகாளியம்மன் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.