பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
ஊத்துக்கோட்டை, :சுந்தரவல்லி சமேத அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 2ம், 3ம் தேதிகளில், நான்காம் ஆண்டு, லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. ஊத்துக்கோட்டை சுந்தரவல்லி சமேத அழகிய சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்வர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று, லட்சார்ச்சனை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, வரும் 2 மற்றும் 3 தேதிகளில், நான்காம் ஆண்டு லட்சார்ச்சனை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் 2ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு மகா சாந்தி ஹோமம் மற்றும் மகா சாந்தி திருமஞ்சனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பின், இரவு, 7:00 மணிக்கு, லட்சார்ச்சனை நடைபெறும். மறுநாள், 3ம் தேதி, காலை, 7:00 மணிக்கு லட்சார்ச்சைனயும், மாலை, 5:30 ஊஞ்சல் சேவையும், தொடர்ந்து சுந்தர வரதராஜர் சேவா குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.