பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தேரோட்டம், மே, 7ம் தேதி நடக்கிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவையொட்டி கடந்த, 21ம் தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. தொடர்ந்து, 28ம் தேதி காப்புக்கட்டுதலும், 29ம் தேதி சந்தி மறித்தல் விழாவும் நடந்தது. இன்று (30ம் தேதி) குடி அழைத்தல், 1ம் தேதி சிவவழிபாடு, 2ம் தேதி பெருமாள் வழிபாடு, 3ம் தேதி மாரியம்மன் வழிபாடு, 4ம் தேதி அய்யனார் வழிபாடு, 5ம் தேதி மலை வழிபாடு, 6ம் தேதி திருக்கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மே, 7ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. 8ம் தேதி ஊஞ்சல் நிகழ்ச்சியும், 9ம் தேதி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலாவும், 11ம்தேதி மஞ்சள் நீராட்டுன் விழா நிறைவு பெறுகிறது.