நெட்டப்பாக்கம்: மடுகரை கூத்தாண்டவர் கோவில் ரத உற்சவம் வரும் 6ம் தேதி நடக்கிறது. மடுகரை திரவுபதியம்மன் கோவிலில் உள்ள கூத்தாண்டவர் கோவில் ரத உற்சவம் நாளை 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை பிடாரியம்மன், மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. 3ம் தேதி பக்கா சூரனுக்கு சோறு போடுதல், 4ம் தேதி மாலை அர்ச்சுணன், திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 5ம் தேதி இரவு கூத்தாண்டவர் கோவிலில் மனிதன் மார்பு மீது மஞ்சள் இடித்தல், கூத்தாண்டவர் திருக்கல்யாண உற்சவமும், முத்துப்பல்லக்கு வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி காலை கூத்தாண்டவர் ரத உற்சவம் நடக்கிறது. 7ம் தேதி கரக திருவிழா, வரும் 8 ம் தேதி மாலை 5 மணிக்கு தீ மிதித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.