பதிவு செய்த நாள்
30
ஏப்
2015
02:04
கோவை : கோவையில், ஆஸ்திக சமாஜம் சார்பில், நாம பிரசார வைபவம் விழா இடையர்பாளையம் வி.ஆர்.ஜி., மகாலில் நேற்று நடந்தது. இதில், தேவாரம் மற்றும் திருப்புகழ் என்ற தலைப்பில், பழநி சண்முகசுந்தர தேசிகர், கரூர் சுவாமிநாததேசிகர் குழுவினர் தேவார இசை பாடல்களை பாடி அதன் மகிமையை எடுத்து கூறினர்.தேவாரம், திருப்புகழ் குறித்து கரூர் சுவாமிநாததேசிகர் கூறியதாவது:சிவபெருமான் பல ஊர்களில் பல பெயர்களில் கோவில் கொண்டு மக்களுக்கு அருள்பாளித்து வருகிறார். தேவார பாடல்களில், சத்து, சித்து, ஆனந்தம், மந்திரம், தந்திரம் அவுசகம் என்று அதன் மகிமைகளை சொல்வார்கள்.தீராத நோய்களை எல்லாம் தீர்க்கும் மகிமை படைத்தது.மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி என்று தேவாரத்தில் பாடப்பட்டுள்ளது. நாம் குடும்பத்தினருக்கு ஏதாவதும் நோய் வந்து விட்டால் இறைவனின் திருநாமத்தை சொல்லி திருநீர் அணிவது வழக்கம். அதில் நோய் தீரவில்லை என்றால் வைத்தியம் முறைகளை நாடுவோம்.தேவாரம் திருவாசகம் தெய்வீக தன்மை கொண்டது. இறைவன் நாமத்தை சொல்லி பாடினால் உண்ணவும், உடுத்தவும், உறங்கவும் என, எல்லாம் கிடைப்பதோடு மனதுக்கு நிம்மதியும் நிலையான சந்தோஷமும் கிடைக்கும்.இவ்வாறு, சுவாமிநாததேசிகர் பேசினார்.