தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் பச்சை சாத்தி கோலத்தில் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2015 03:04
தூத்துக்குடி: தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா. 8ம் நாளில் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் வீதியுலா வந்தார். தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா ஏப்., 23 ம் தேதி கொடியேற்றத்மடன் துவங்கியது. தினமும் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர். ஏழாம் நாளான நேற்று காலை நடராஜ பெருமானுக்கு உருகு சட்ட சேவையும், மதியம் கும்பாபிஷேகமும் நடந்தது. இரவு 8 மணிக்கு சுவாமி சிவப்பு சாத்தி பித்தளை சப்பரத்தில் வீதியுலா வந்தார். அதன் பின்பு வெள்ளை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். எட்டாம் நாளில் காலை 9 மணிக்கு சுந்தரபாண்டிய விநாயகர் மண்டபத்தில் இருந்து பச்சை சாத்தி ரத வீதிகள் வழியாக வீதியுலா வந்தார். பகல் 12 மணிக்கு நடன கோலத்தில் சிவன் கோயிலில் சேர்க்கை நடை பெறுகிறது. மதியம் 2 மணிக்கு சுவாமியும் அம்பாளும் பல்லக்கில் வீதியுலா வந்தனர்.மே 2ல் தேரோட்டம் நடக்கிறது.