Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி ... 234 கோவில்களில் கட்டண தரிசனம் ரத்து?அறநிலைய துறை பரிந்துரை! 234 கோவில்களில் கட்டண தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு மகா தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு மகா தரிசனம்!

பதிவு செய்த நாள்

04 மே
2015
10:05

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், நேற்று நடந்த சிறப்பு மகா தரிசனத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில், கடந்த, 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம், நடராஜர் தேரோட்டம் நடந்தது.தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து, இரவு, 7:00 மணிக்கு கிழக்கு சன்னிதியில் நிலைக்கு வந்தது. மாணிக்கவாசகர் தேர் முன் எழுந்தருள, திருவெண்பா பாடப்பெற்று, மகா தீபாராதனை நடந்தது. நடராஜப் பெருமான் சமேத சிவகாமசுந்தரி அம்மன், தேரிலிருந்து இறங்கி ஆனந்த நடனமாடியவாறு ராஜசபை ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு இரவு, 11:00 மணிக்கு லட்சார்ச்சனை, அதிகாலை, 4:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, சொர்ண அபிஷேகம் நடந்தது. பின், சுவாமி திருஆபரணம் அணிந்து ராஜ அலங்காரத்தில் ஆயிரங்கால் உள்மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை, 11:00 மணிக்கு தீட்சிதர்கள் சிற்சபையில் ரகசிய பூஜை, 12:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, மண்டகப்படி சிறப்பு பூஜை, பகல், 1:30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபம் முன் எழுந்தருளிய சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது.பகல், 1:45 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிகள் ராஜசபையில் இருந்து தங்க மஞ்சத்தில் புறப்பாடாகி, ஆனந்த நடனமாடியவாறு காட்சியளித்தார்.அப்போது பக்தர்கள், தில்லைக் கூத்தனே, பொன்னம்பலத்தானே, ஆடல் வல்லானே என, கோஷம் எழுப்பியவாறு தரிசனம் செய்தனர். பின், நடராஜர் சிற்சபை பிரவேசம் அடைந்து, தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar