பதிவு செய்த நாள்
04
மே
2015
12:05
தஞ்சாவூர்; தஞ்சை, புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலில், தினமும், நான்கு கால பூஜைகள் நடக்கிறது. அம்மன் புற்று வடிவில் அருள்பாலிப்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, 45 நாட்கள் காலை, மாலை அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் செய்யப்படும். ஐந்தாண்டுகளுக்கு பின், சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முதல் 45 நாட்களுக்கு அ ம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடக்கிறது. அப்போது, அம்பாளை ஒரு வெள்ளைத் துணியில் வரைந்து, ஆவாஹனம் செய்த பின், அதற்கு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடக்கும். தைலக்காப்பு விழாவையொட்டி நேற்று, காலை, 5 மணி முதல் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தேவானுக்ஞை, யஜமான சங்கல்பம், புண்யாஹனம், அக்னிபிரவேசம், ஜபஹோமம், பூர்ணாஹூதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை, 8 மணிக்கு கடம் புறப்பாடு நடந்து. காலை, 8.30 மணிக்கு அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.