வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டி பதினெண் சித்தர் பீடத்தில் அறக்கட்டளை சார்பாக சித்ராபவுர்ணமியையொட்டி யாகசாலை பூஜை, சித்தர் பீடத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.அன்னதானம், இலவச அக்குபஞ்சர், சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முகாமும் நடந்தது. பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். திருவள்ளுவர் இலக்கிய மன்றத் தலைவர் தனபாலன், பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அறங்காவலர் விஜயபாஸ்கர் வரவேற்றார். மட்டப்பாறை ராஜகுருசாமி நன்றி கூறினார்.