பதிவு செய்த நாள்
06
மே
2015
01:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று, சுவாமி, அம்மன் சன்னதி உள்ளிட்ட பிற சன்னதியில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டன. இதில், 52 லட்சத்து 5 ஆயிரத்து 925 ரூபாய் ரொக்க பணமும், 42 கிராம் தங்கம், 3 கிலோ 270 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. < உண்டியல் வருவாய் எண்ணும் பணியில், கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கோயில் சூப்பிரெண்டுகள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன்,பள்ளி மாணவிகள் ஈடுபட்டனர்.