பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
11:07
சென்னை : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆடி மாத ஆன்மிக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இச்சுற்றுலா வரும் 18ம் தேதி முதல் துவங்க உள்ளது. வாரந்தோறும் திங்கள் கிழமை மற்றும் வியாழக்கிழமை, சென்னையிலிருந்து காலை 6 மணிக்கு சுற்றுலா துவங்கும். இச்சுற்றுலா செல்வோர், சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, புதுச்சேரி பகுதியில் உள்ள 108 அம்மன் கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவர். இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு 3,250 ரூபாய், குழந்தைகளுக்கு 2,500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தங்குமிடம், போக்குவரத்து, வழிகாட்டி சேவை கட்டணத்தில் அடங்கும். உணவுச் செலவை சுற்றுலாப் பயணிகளே பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு, சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை தொடர்பு கொள்ளலாம்.