சென்னிமலை: சென்னிமலை யூனியன் புஞ்சைபாலதொழவு கிராமம் கரட்டுப்பாளையத்தில் புதிதாக அமைத்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோவில், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 6ம் தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. யாகசாலை பூஜைகள் ஐந்தாம் தேதி காலை 5 மணிக்கு துவங்குகிறது. ஆறாம் தேதி காலை 9 மணிக்கு கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம் நடக்கிறது.