பதிவு செய்த நாள்
04
ஜூலை
2011
11:07
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வஜீர்கான் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 1ம் தேதி கணபதி ஹோமம், கோ பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் கடம் புறப்பாடு நடந்தது. காலை 10.15 மணிக்கு விநாயகர், முருகன், முத்துமாரியம்மன், துர்க்கை, விஸ்வநாதர், தட்சணாமூர்த்தி, நவகிரகம், நாகம், வசந்தமண்டபம் கும்பாபிஷேகம் ஒரே நேரத்தில் நடந்தது. முருகானந்தம் குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தது. மதியம் சாகை வார்த்தலும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்தது. அமைச்சர் சம்பத், சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன், ரோஸ் கண்ணன், தாசில்தார் பன்னீர்செல்வம், காசிநாதன், சவுந்தர், செந்தாமரைக்கண்ணன், சேகர், சடகோபராமன், பாண்டியன், திருஞானம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.