கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடப்பட்டது.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் வைகாசிப் பெருவிழா வரும் 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, நேற்று காலை பந்தல்கால் நடும் விழா நடந்தது. முன்னதாக 7:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அலங்கார மண்டபத்தில் சங்கல்பம், விநாயகர் வழிபாடு, புண்யாஹவசனம் நடந்தது. பின்னர், பூமி பூஜை, நவதானியங்களையிட்டு பந்தல்கால் நடப்பட்டது. பூஜையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி, கோவில் செயல் அலுவலர் ரத்தினாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர். நாகராஜ் சிவாச்சாரியார் தலைமையில் பூஜை நடந்தது.