பிரதமர் மோடி நேற்று, கோல்கட்டா அருகில் உள்ள, தக் ஷினேஸ்வரம் சென்று, பிரபலமான தக் ஷினேஸ்வர் காளி கோவிலில் வழிபட்டார்.
பகவான் ராம கிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்து, வழிபட்ட, அவருக்கு மிகவும் பிடித்த மான, பவதாரிணி அம்மனை வணங்கிய மோடியிடம், கோவிலின் மேம்பாட்டிற்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என, அங்கிருந்த நிர்வாகிகள் கேட்டனர். ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ள அந்தக் கோவில் வளாகத்தில், ராமகிருஷ்ண பரமஹம்சர் தங்கியிருந்த அறைகளில் தியானம் செய்தார்.