நாகர்கோவில் : புத்தளம் பொருத்தட்டுவிளை வைகுண்டபதி சித்திரை திருவிழா பத்து நாட்கள் நடைபெற்றது. தினமும் விழாவில் பணிவிடை, ஏடுவாசிப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பத்தாம் நாள் விழாவில் காலை 7.30 மணிக்கு திருவிளக்கு மணி, தொடர்ந்து அய்யா வைகுண்டர் பல்லக்கில் எழுந்தருளல், தொடர்ந்து தேர் திருவிழா, தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.