சிவகாசி: சிவகாசியில் பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா, 10 நாட்களாக நடைபெற்றது. அம்பிகை ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் மண்டகபடிகளில் வீற்றிருந்து அருள் பாலித்தார். விழாவில் நிறைவாக தேரோட்டம் நடந்தது. நேற்று மாலை சிறிய தேரில் விநாயகர் ரதவீதிகளில் உலா வந்து நிலைக்கு வந்தார். அதன்பின் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் வீற்றிருந்த பத்திரகாளியம்மன் உற்சவரை ஏராளமான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.